தமிழகத்தில் அக்.14-ம் தேதி அமைச்சரவை கூட்டம்!!!

தமிழகத்தில் வரும் 17ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், அக்டோபர் 14ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை அமைச்சரவை கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினத்தில் பல்வேறு சட்டங்கள், ஆலோசனை நடத்தப்படுவது வழக்கம்.

அதன் படி, வருகின்ற அக்டோபர் 14ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் கூட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் துறைகள் மாற்றம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment