
தமிழகம்
பரபரப்பான அரசியல் சூழல்: இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம்!!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.
குறிப்பாக ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய குறிப்பிட்ட அறிக்கையை விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்ப்பிக்க இருக்கும் நிலையில் அவசர சட்டத்தை விரைவில் செயல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாமல்லப்புரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதால் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா நடத்துவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், மேகதாது அணை விவகாரம், பருவமழை முன்னெச்சரிக்கை, புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
