ஜாதகப்படி கணவன் மனைவி இருவரிடையே பிரச்சினைகள் உண்டாகக் காரணம் என்ன?

454e2bb1b1ccc0ac8739eb5f7844ff59

ஜோதிடத்தில் கணவன் மனைவி ஜாதகம் மிக மிக முக்கியமானது. இவர்களுடைய ஜாதக கட்டங்கள் ஒன்றிப் போனால் தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இல்லையெனில் இவர்களிடையே சண்டையும், சச்சரவுகளும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும்.

இதன் காரணமாக தான் நாம் திருமணத்தின் போது இருவருக்கும் ஜாதகம் ஒன்றிப் போகிறதா என்று பார்க்கிறோம். இப்படி ஜாதகம் ஒன்றிப்போய் திருமணம் செய்தாலும் சில சமயங்களில் இருவரிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். இதற்கு காரணம் தான் என்ன என்று பார்ப்போமா…

ஜாதகத்தில் உள்ள கிரக நிலை மாற்றத்தால் இரண்டாம் இடத்து அதிபதி பாவ கிரகங்களுடன் சேரும் போது கணவன் மனைவி இருவரிடையே பிரச்சினைகள் ஏற்படும்.  மேலும் களத்திர ஸ்தான அதிபதி பாவ கிரக பார்வை பெற்றிருந்தாலும் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சண்டைகள் ஏற்படும்.

மேலும் நல்ல களத்திர ஸ்தானத்திற்கு உரிய சூரியன் தீய சேர்க்கை சேர்ந்து கெட்ட பார்வை பெற்றாலும் கணவன் மனைவி இருவரிடையே பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவலை வேண்டாம் இவற்றை சரி செய்ய சில பரிகாரங்களும் உள்ளன. என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று நாம் பின்வரும் நாட்களில் பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.