இடைத்தேர்தல்:காங்கிரஸ் கட்சிக்கு அமோக வரவேற்பு! பாஜக,காங்கிரஸ் முன்னிலை நிலவரம்!!

தற்போது பல மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போன்றவைகள் முன்னிலையில் உள்ளன. அதன்படி மேற்கு வங்கத்தில் கர்தகா, சந்திப்பூர், கொசபா, தின்ஹடா ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.காங்கிரஸ்

இந்த நான்கு தொகுதிகளிலும் அந்த மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியே முன்னிலையில் உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளன.

அதன்படி பதேபூர், அர்க்கி, ஜூப்பல்-கொத்கை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலா ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளன. வல்லப் நகர், தாரிவாட் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளனர்.

இதனால் பெருவாரியான மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment