Connect with us

இனி சூப்பர் மார்க்கெட்டுல ஒயின் வாங்கிக்கோங்க.. அதிரடியான திட்டத்தை அறிவித்த மகாராஷ்டிரா

Untitled 124

செய்திகள்

இனி சூப்பர் மார்க்கெட்டுல ஒயின் வாங்கிக்கோங்க.. அதிரடியான திட்டத்தை அறிவித்த மகாராஷ்டிரா

இனி சூப்பர் மார்க்கெட்டுல ஒயின் வாங்கிக்கோங்க.. அதிரடியான திட்டத்தை அறிவித்த மகாராஷ்டிரா

ஒவ்வொரு மாநிலத்திற்கும் பெரிய அளவில் வருமானம் ஈட்டும் ஒரு ஆதாரமாக மதுபான ஆலைகள் இருக்கின்றன.

கொரோனா காலத்தில் பசியால் ஒருபுறம் மக்கள் வாடிய நிலையில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் மட்டும் ஏகபோகத்துக்கு விற்றுத் தீர்ந்தன.

தற்போது மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்க எண்ணி மகாராஷ்டிரா மாநில அரசு ஒயின் மதுபானம் அல்ல என்று அறிவித்துள்ளது.

அதாவது மகாராஷ்டிர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மதுபான வகையில் ஒயின் சேராது என்று அறிவித்ததுடன், சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் ஒயின் இனி விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

இதன்மூலம் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளது, அதாவது ஒயின் பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்தத் திட்டத்தின் மூலம் பழங்களை விளைவிக்கும் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் கூறியுள்ளது.

அத்துடன் வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மதுவிலக்கு அமுலில் உள்ள மாவட்டங்களிலும் ஒயின் விற்பனை செய்யக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சரவையின் இந்த திட்டம் மது அருந்துவதை ஊக்குவிப்பதாக இருப்பதாகக் கூறி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்யப்படுவதை ஒப்புக் கொள்ள முடியாது என்று பா.ஜ.க. திட்டவட்டமாக அறிவித்து எதிர்த்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top