Connect with us

உடனே வாங்குங்க..! தாறுமாறாக குறைந்த தங்கத்தின் விலை…! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..;

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

News

உடனே வாங்குங்க..! தாறுமாறாக குறைந்த தங்கத்தின் விலை…! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..;

உடனே வாங்குங்க..! தாறுமாறாக குறைந்த தங்கத்தின் விலை…! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..;

தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பின்பு நம் தமிழகத்தில் 40 ஆயிரம் ரூபாயை தாண்டி சவரன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தினந்தோறும் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

அதுவும் குறிப்பாக ஓரிரு நாட்களுக்கு முன்பு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் கிராம் ஒன்று 5050 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன்  ரூபாய் 39 ஆயிரத்து 538 க்கு விற்பனை செய்யபட்டு வருகிறது.

அதே வேளையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம்  ரூபாய் 4947 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலையும் 30 காசுகள் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 73.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top