ஆனாலும் சிவாங்கி இப்படி செய்திருக்கக் கூடாது… நெட்டிசன்கள் வருத்தம்…

சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாவார். இவரின் தந்தை கிருஷ்ணகுமாரும் பாடகர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதற்குப் பின் குக் வித் கோமாளி என்ற மற்றொரு நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார். இவரின் தனித்துவமான, குழந்தைத்தனமான குரலுக்கும், சுட்டித்தனமான செயல்களுக்கும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு துணையாக கோமாளியாக சமையல் தெரியாதவர்கள் இருப்பர். அந்த கோமாளிகளுள் ஒருவராக சிவாங்கி இருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் அஸ்வின்குமார் கலந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் அஸ்வின்- சிவாங்கி ஜோடி மிகப் பிரபலமானது. அஸ்வின் சமையல் செய்யும் போது கோமாளியாக சிவாங்கி செய்த சுட்டித்தனம் அவ்வளவு ரசிக்கும்படியாகவும் அனைவரையும் சிரிக்கவும் வைத்தது.

அதன் பின்பு ஆல்பம் பாடல்களை பாடினார் சிவாங்கி. தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடியுள்ளார். அதோடு நிற்காமல் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, அதை பயன்படுத்திக் கொண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். மேலும் ‘சிவாங்கி கிருஷ்ணகுமார்’ என்ற யு- டியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அன்றாடம் போஸ்ட்களை போடுவார். அப்படி அவர் ஐஸ்கிரீம் சாப்பிட கையில் வைத்தபடி போஸ்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்த அவரது ரசிகர்களில் ஒருவர், நீங்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உங்கள் குரல்வளம் போய்விடும். பாடகிகள் சித்ரா மற்றும் சுஜாதா அவர்களை போல் ஆகவேண்டும் என்றால் நீங்கள் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடாக இருந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த சிவாங்கி, நான் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்று நீங்கள் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம். எனக்கு என்ன பிடிக்கிதோ அதைத்தான் நான் செய்ய முடியும், உங்களுக்காக நான் வாழ முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிலுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், சிலர் சிவங்கியின் நல்லதுக்காக தானே அந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். சிவாங்கி சற்று பொறுமையாக விளக்கி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...