News
போலீஸ் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு! எஸ்எஸ்ஐ கைது!
காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் தான் தமிழகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பல காவல் துறையினர் பலருக்கும் நண்பனாகவும் செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல பகுதிகளில் ஊரடங்கு காலகட்டத்திலும் காவல்துறையினர் பலரும் உணவின்றித் அவர்களுக்கு உணவளிப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காவல்துறையினர் மூர்க்கமாக வன்மையாகவும் பொதுமக்களை அடிப்பதும் துன்புறுத்துவதும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் எஸ்ஐ ஒருவர் வியாபாரி ஒருவரை தாக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் .இச்சம்பவம் சேலம் சோதனைச்சாவடியில் நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி சேலம் சோதனைச் சாவடியில் போலீசார் தாக்கியதில் வியாபாரி இறந்த வழக்கில் எஸ் எஸ் ஐ கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் வியாபாரி முருகேசன் இறந்தது தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியை கைது செய்தது போலீஸ். மனித உரிமை மீறல், கொலை பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு ஏத்தாப்பூர் எஸ் எஸ் ஐ பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழப்பாடி எடப்பாடியில் வாகன சோதனையின் போது போதையில் வந்த முருகேசன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் லத்தியால் தாக்கும் போது கீழே விழுந்து தலையில் காயமடைந்த முருகேசன் மருத்துவமனையில் இரந்தார். மேலும் சேலம் அருகே வியாபாரி உயிரிழந்த வழக்கில் கைதான எஸ் எஸ் ஐ பெரியசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி இத்தனை உத்தரவிட்டுள்ளார்.
