வெறிச்சோடிய பேருந்து நிலையம்!! 90% பேருந்துகள் இயக்கப்படவில்லை!!

தற்போது நாடெங்கும் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாததால் சாதாரண மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

அதன்படி வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்தளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வேலை நிறுத்தத்தால் பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

அண்ணா நகர், வடபழனி, தியாகராயநகர், பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்பியவர்களுக்கு பேருந்து கிடைக்காததால் அவதிக்குள்ளாகின்றனர்.

விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.கோயம்பேடு  பேருந்து நிலையத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் கோயம்பேடு பயணிகளுக்காக காத்திருக்கின்றனர்.

பேருந்துகள் குறைந்த அளவே செல்வதால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்களின் கூட்டம் காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் ஆட்டோக்களில் சவாரி விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment