Connect with us

பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி!!

accident 1

செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி!!

கடந்த சில நாட்களாகவே சாலை விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்தவகையில் இமாச்சலத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்திலிருந்து சைஞ் பகுதிக்கு தனியார் பள்ளி வாகனம் ஒன்று பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது சுமார் 8 மணி அளவில் நியோலி – ஷான்சர் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சோல்ஜர் பள்ளத்தாக்கில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கியது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் பல பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகுர் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top