
தமிழகம்
பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!!! 3 பேர் உயிரிழப்பு!!!
நம் தமிழகத்தில் சாலை விபத்துகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தாராபுரம் அருகே பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கார் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த காரில் 5 ஆண்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதே போல் திருப்பூரில் இருந்து தாராபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தினர்.
அப்போது முதற்கட்ட தகவலின் படி, கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதாக தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
