பேருந்தில் குண்டு வெடிப்பு: உடல்சிதறி பரிதாப பலியான 13 பேர்!

1562294ec5f79d47aeb83c0ed2d972e0

பாகிஸ்தானில் ஓடும் பேருந்து ஒன்றில் நடந்த வெடிகுண்டு விபத்தில் 13 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தானில் உள்ள கட்டுமான பணிகளில் சீனாவின் பொறியாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சீனாவை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற ராணுவ வீரர்கள் உள்பட 30 பேர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. இதனை அடுத்து அந்த பேருந்திலிருந்தவர்கள் உடல் சிதறி உடல் சிதறி பலியாகினர்

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும் இதில் 9 பேர் சீனப் பொறியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிர் பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது 

இந்த வெடிகுண்டு குறித்த முதல் கட்ட விசாரணையில் தீவிரவாதிகள் பேருந்தில் குண்டு வைத்து குறிப்பிட்ட நேரத்தில் இயக்கி உள்ளதாக தெரிகிறது. இந்த வெடிகுண்டு விபத்து குறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

பாகிஸ்தான் மற்றும் சீன நாடுகள் நட்புடன் இருக்கும் நிலையில் சீன நாட்டின் பொறியாளர்கள் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment