Connect with us

ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்து: 6 வீரர்கள் பலி!!

Capture 23

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்து: 6 வீரர்கள் பலி!!

கடந்த சில நாட்களாக நம் நாட்டில் விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வாருகிறது.

அந்த வகையில் ஜம்மு – காஷ்மீர் அடுத்துள்ள பஹால்கம் அருகே இருக்கும் இந்தோ- திபெத் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த முப்பத்தி ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் உள்ளிட்டோர் பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு காயமடைந்த மற்ற வீரர்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கி உள்ள வீரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top