சென்னையில் பேருந்து மீது கிரேன் மோதி விபத்து: இழப்பீடு அறிவிப்பு!!

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளின் போது சேதமடைந்த அரசு பேருந்துக்கு மெட்ரோ பணியை செய்துவரும் தனியார் நிறுவனம் இழப்பீடு வழங்கியுள்ளது.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் தொடர்ச்சியாக மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலையில் மாநகர பேருந்து சென்று கொண்டிருந்த போது மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு இருந்த கிரேன் மாநகர பேருந்தின் மீது விழுந்தது.

இதனால் மாநகர பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வடபழனி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தற்போது ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போல் பேருந்தில் பயணித்த ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிரேன் விபத்தில் சேதமடைந்துள்ள மாநகர பேருந்தை சரி செய்வதற்காக மெட்ரோ பணி நிர்வாகம் சார்பில் ரூ.ரூ.2.5 லட்சம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.