சின்னம்மா பத்தி தவறான பேச்சு! பழனிச்சாமி உருவ பொம்மையை எரிக்க முயற்சி!!

எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக கட்சியில் அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. இந்த நிலையில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென் தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சசிகலாஅவருக்கு அதிமுக கட்சியில் மட்டுமின்றி அமமுக கட்சியிலும் தொண்டர்கள் அதிகம் உள்ளனர் அந்த தொண்டர்கள் திடீரென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்துள்ளனர்.

நெல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் முயற்சித்துள்ளனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுக கொடியுடன் வந்து எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் நெல்லையின் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழல் உருவாகியது.

அவர்கள் “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா குறித்து அவதூறு பரப்பி வருவதாக குற்றச்சாட்டு” வைத்துள்ளனர். சசிகலாவின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் நெல்லை மாவட்டத்திற்கும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.சசிகலாவின் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தில் நெல்லை மாவட்டத்திற்கும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment