6 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா அபாரம்.!! இங்கிலாந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட்;

நம் இந்திய கிரிக்கெட் அணி மிகுந்த திறமையாக விளையாடிக் கொண்டு வருகிறது. ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் இந்திய அணி அந்த அளவிற்கு தங்களின் திறமையை பிரதிபலிக்கவில்லை.

இதனால் அணியின் நிலைமை அவ்வளவு தான் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதனை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது இங்கிலாந்து சுற்றுப்பயணம்.

இந்தியா தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வென்றது.

இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் எப்படியாவது ஐம்பது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரினை வென்று விடலாம் என்று எண்ணியிருந்தனர். மேலும் இந்தியா இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரினையும் மேற்கொண்டுள்ளது.

இதில் முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 110 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகிவிட்டன.

இந்திய தரப்பிலிருந்து அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்து அபாரம் காட்டினார். இந்த சிறிய இலக்கினை இந்திய அணி வீரர்கள் எந்த ஒரு விக்கெட்டும் இல்லாமல் எட்டி விடுவார்கள் என்று விமர்சனங்கள் எழுந்து வந்துள்ளன. மேலும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.