Connect with us

75வது ஆண்டு எருது விடும் விழா: காளை முட்டியதில் 100 பேர் படுகாயம்!

bull fight 1050x650 1

Tamil Nadu

75வது ஆண்டு எருது விடும் விழா: காளை முட்டியதில் 100 பேர் படுகாயம்!

75வது ஆண்டு எருது விடும் விழா: காளை முட்டியதில் 100 பேர் படுகாயம்!

பேச்சில் மட்டுமல்ல செயலிலும் தமிழர்கள் வீரர்கள் ஆகவே காணப்படுவார்கள். அவர்கள் செயல் மட்டுமின்றி விளையாடும் விளையாட்டுகளும் வீர விளையாட்டுக்கள் ஆகவே அமையும். அந்த வகையில் தமிழர்களின் வீர விளையாட்டாக காணப்படுகிறது ஜல்லிக்கட்டு.

ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகமெங்கும் நடைபெற்று வரும். ஜல்லிக்கட்டு மட்டுமின்றி மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகும்.

அந்த வகையில் எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரப்பம் கிராமம் மிகவும் பெயர் பெற்றதாக காணப்படுகிறது.ஏனென்றால் ஓரப்பம் கிராமத்தில் பல ஆண்டுகளாக எருதுவிடும் விழா நடைபெறுகிறது

அதன்படி கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம்  கிராமத்தில் 75ஆம் ஆண்டு எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. இந்த எருது விடும் விழாவில் காளைகள் முட்டியதில் நூறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எருது விடும் விழாவில் 400 காளைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top