உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை இடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அதில் ஸ்ரீரங்கம் தாலுகா உய்யக்கொண்டான் மலை பகுதியில் சுமார் 51 செண்ட் நிலத்தில் 100 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை அமர்வு நீதிபதி சத்யநாராயண பிரசாத், நீதிபதி சகாதேவன் ஆகியோர் முன் வந்தது.

அப்போது அனுமதியின்றி கட்டடம் கட்டுவதற்கு துணையாக இருந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார். அதே போல் வீடு வாங்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.