சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்து விபத்து: பெரும் பரபரப்பு..!

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை பாரிமுனையில் அரண்மனைக்காரன் தெருவில் பழமையான நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் பாரிமுனை, உயர்நீதிமன்றம் கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாகவும் இடிபாடுகளுக்கு இடையே யாரும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தேடல் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

building

இன்று இடிந்து விழுந்த கட்டிடம் மிகவும் பழைய கட்டிடம் என்றும் அந்த கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வந்த நிலையில் திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் விபத்து நடந்த இடத்தில் வடக்கு இணை ஆணையர் மற்றும் தீயணைப்பு துறை இணை இயக்குனர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர். 24 மணி நேரமும்  பரபரப்பாக இயங்கி வரும் சென்னை பாரிமுனையில் திடீரென 4 மாடி கட்டிடம் இருந்து விழுந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் உள்ளவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதுவரை வெளியான தகவல் படி இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இடிபாடுகளை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.