Connect with us

பட்ஜெட்டில் அதிரடி:புதிய வரிவிதிப்புகள் கிடையாது! எல்ஐசி பங்குகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பல….

budget 6 660 020221010651

News

பட்ஜெட்டில் அதிரடி:புதிய வரிவிதிப்புகள் கிடையாது! எல்ஐசி பங்குகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பல….

பட்ஜெட்டில் அதிரடி:புதிய வரிவிதிப்புகள் கிடையாது! எல்ஐசி பங்குகள், வேலைவாய்ப்புகள் மற்றும் பல….

இன்றைய தினம் இந்தியாவில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட லேப்டாப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் சீதாராமன்.

இதில் இந்த ஆண்டு பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று அவர் கூறினார். அதோடு மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறினார்.

எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதே வேளையில் புதிய வரிவிதிப்புகள் இருக்காது என்றும் கூறியுள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரிவிதிப்புகள் இருக்காது என்றும் அவர் கூறினார்.

ஏழைகள் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top