Connect with us

மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!! மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம்!!

tn budget

Tamil Nadu

மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!! மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம்!!

மார்ச் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!! மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம்!!

இன்றைய தினம் காலையில் தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை காகிதமில்லா பட்ஜெட்டை தமிழகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

மேலும் நாளைய தினம் காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறி இன்றைய தின பட்ஜெட்டை நிறைவு செய்தார்.

இந்நிலையில் மார்ச் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 24ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.

சட்டப்பேரவையில் நாளைய தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Tamil Nadu

To Top