Connect with us

பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அதிரடி !!

fa899df819587e7e9ce4a78f3009695f

Tamil Nadu

பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அதிரடி !!

பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அதிரடி !!

தமிழகத்தில் இன்று 2022-2023 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த சட்டசபை கூட்டத்தொடரை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தொடரில் கல்வி, மருத்துவம், வேளாண்மை,கட்டிட பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற கேள்வி அனைவர் இடத்திலும் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரானது வருகின்ற 19 முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என்றும் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

நாளை மறுநாள் அரசு விடுமுறை என்பதால் அதனை தொடர்ந்து 21,22,23 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

மேலும், வருகின்ற 24ஆம் தேதி முன்பண மானியக் கோரிக்கை மற்றும் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் பதிலுரை அளிப்பார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top