Connect with us

2022 பட்ஜெட் கூட்டத் தொடர்: கொரோனா மூன்றாவது அலையை மையப்படுத்தி இருக்குமா?

budget 2022 under omicron shadow

செய்திகள்

2022 பட்ஜெட் கூட்டத் தொடர்: கொரோனா மூன்றாவது அலையை மையப்படுத்தி இருக்குமா?

2022 பட்ஜெட் கூட்டத் தொடர்: கொரோனா மூன்றாவது அலையை மையப்படுத்தி இருக்குமா?

பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது பிப்ரவரி மாதத்தில் தான். பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்து பல முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது. அதன்படி 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலும், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது.

இவை மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது ஒன்றாக கருதப்படும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சார்பாக தற்போது நிதியமைச்சராக செயல்பட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் நான்காவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். 2019ஆம் ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டுவருகிறார். எப்போதும் பெட்டியில் வைத்து கொண்டுவரப்படும் இந்த நடைமுறையை மாற்றிய பெருமை நிர்மலா சீதாராமன்க்கு சேரும்.

இவர் இதற்கு மாற்றாக சிவப்பு நிற துணியில் செய்யப்பட்ட பையில் பட்ஜெட் பேப்பர்களை எடுத்து வந்தார். இதன் பின்பு கடந்த ஆண்டு முதல் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு உள்ள நிலையில் இந்த ஆண்டு மிகவும் சிக்கலான ஆண்டாக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் மூன்றாவது அலையை எதிர்நோக்கி வரும் பெருந்தொற்றை மையப்படுத்தியதாக பட்ஜெட் கூட்டத்தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top