Connect with us

முழு வீச்சில் தயாராகிறது பட்ஜெட்; அடுத்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

budget22 10 16433727663x2 1

தமிழகம்

முழு வீச்சில் தயாராகிறது பட்ஜெட்; அடுத்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

முழு வீச்சில் தயாராகிறது பட்ஜெட்; அடுத்த மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல்!

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட் பலரும் எதிர்பாரதவிதமாக இல்லை என்றே கூறலாம். இதற்கு எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் பல விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலங்களுக்குள் மாநில அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக உள்ளார் பழனிவேல் தியாகராஜன். தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் இன்று பட்ஜெட் பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சேர்ந்த சங்கத்துடன் தமிழக நிதியமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் முழுவீச்சில் தயாராகி கொண்டிருக்கிறது பட்ஜெட். பட்ஜெட்டில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து பல கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது உள்ளது. தொழில் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார். அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனை நடத்தி வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top