மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட லேப்டாப்பில் பட்ஜெட் தாக்கல்!

இந்திய நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

அவர் நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டைப் போல காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கலாக காணப்படுகிறது. இதனால் இரண்டாவது ஆண்டாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட லேப்டாப்பில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர் கொண்டுள்ளது என்றும் கூறினார். மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment