அதானி சரிவை தடுத்து நிறுத்துமா பட்ஜெட்.. இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக சரிந்து வருவதன் காரணமாக ஒட்டுமொத்த பங்கு சந்தை சரிந்து வருகிறது என்பதும் சென்செக்ஸ் நீண்ட இடைவேளைக்கு பிறகு 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காலை முதலே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சரின் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பங்குச்சந்தையும் உயர்ந்து வருகிறது என்பதும் எதிர்பார்த்தபடி சலுகைகள் இருந்தால் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share market

குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி குறைவு, வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு ஆகியவை இருந்தால் பங்குச்சந்தை மிகச்சிறந்த அளவில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியாகும் போது பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதானி நிறுவனத்தின் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று பட்ஜெட் காரணமாக மீண்டும் உயரும் என்று கூறப்படுகிறது. சற்றுமுன் வரை சென்செக்ஸ் 540 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 900 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 178 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் சிறப்பான சலுகை அறிவிப்புகள் இருந்தால் சென்செக்ஸ் 61 ஆயிரம் புள்ளிகள் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.