ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்-மார்ச் 25ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் சென்னையில் கண்டன போராட்டம்!!

கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தமிழகத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை பட்ஜெட் தமிழகத்தின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை வேளாண் பட்ஜெட்டை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது.

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றி பலரும் கருத்துக்களை கூறிக்கொண்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

இந்நிலையில் தமிழகத்தில் பட்ஜெட்டுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மார்ச் 25ஆம் தேதி பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மார்ச் 25-ம் தேதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டை தந்துள்ள தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment