ஜன்தன் கணக்கு முதல் விவசாயிகள் வரை; மத்திய பட்ஜெட்டின் அதிரடி அறிவிப்புகள் !

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து காணலாம்.

பிரதமர் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2014ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கலாகி வரும் மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்…

  • 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
  • கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு
  • மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி
  • உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
  • கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு
  • தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்
  • விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்
  • வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு
  • குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்
  • 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்
  • பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை
  • ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்
  • 40 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.