பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக ரசிகர்களும் அவரது நினைவு தினத்தை மறக்காமல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீ என்பதும் அவர் ஹாலிவுட்டில் நடித்த திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 1973-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி மர்மமான முறையில் புரூஸ் லீ மறைந்தார். அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பது இப்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புரூஸ் லீ ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகின்றனர். அந்த வகையில் இன்று அவரது நினைவு நாளை அடுத்து அவரது ரசிகர்கள் சென்னை உள்பட பல பகுதிகளில் அவரது புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட புரூஸ் லீ படங்கள் இப்பொழுது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.