
Tamil Nadu
பப்ஜியால் ஏற்பட்ட வினை: சொந்த நண்பரையே கத்தியால் குத்திய நண்பரின் அண்ணன்கள்!!
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன தயாரிப்பால் உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அவற்றில் இளைஞர்கள் அடிமையான பப்ஜி என்ற விளையாட்டும் ஒன்று தான்.
அதற்கு பின்பு பலரின் கோரிக்கையை ஏற்று பப்ஜியானது மீண்டும் ப்ளே ஸ்டோரில் கொண்டுவரப்பட்டது. இதனால் பப்ஜி விளையாடுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த விளையாட்டு அவ்வப்போது தகராறில் முடிவதாக தெரிகிறது. பப்ஜி தகராறின் காரணமாக கத்திகுத்து ஏற்பட்டு நான்கு பேர் தற்போது கைதாகியுள்ளனர். அதன்படி சென்னை பூந்தமல்லி அருகே பப்ஜி விளையாட்டால் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கூடப்பாக்கத்தில் வீட்டில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த அஜித்குமார், சசிகுமார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் தனது சகோதரர்களை வரவைத்து சசிகுமாரை கத்தியால் குத்தியுள்ளார் அவரது நண்பர் அஜித்குமார்.
கத்திக்குத்து விவகாரத்தில் செல்வம், சாமுவேல், விஜயகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தது போலீஸ்.
