தண்டவாளத்தில் தலை வைத்து தம்பி தற்கொலை; அதிர்ச்சியில் அண்ணன் எடுத்த சோக முடிவு!

தம்பி தற்கொலை செய்து கொண்ட அதே தண்டவாளத்தில் தலை வைத்து அண்ணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் – ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்த அசோக் வயது 21 வாலிபர் ஏகாட்டூர்
ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோடு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், ஏற்கனவே அவருடைய தம்பி மதன்பாபு அதே பகுதியில் தண்டவாளத்தில் தலை வைத்து 2021 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தம்பி தற்கொலை செய்து கொண்ட சோகத்தில் இருந்து வந்த அண்ணன் அசோக் அதே இடத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தில் இரண்டு மகன்களும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏகாட்டூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.