அடக்கொடுமையே!! தங்கையை பலத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன் கைது!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை சங்ககிரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் விவசாயக் கூலி தொழிலாளியான இவர் தனது அண்ணன் மயில்சாமி ஆகியோர் அருகருகே வசித்து வந்துள்ளனர். மயில்சாமியின் மகன் கார்த்தி ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறை தினங்களில் வீட்டில் இருப்பது வழக்கம் வடிவேலின் 17 வயது மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இருவரும் அண்ணன், தங்கை என்பதால் சிறுமி, கார்த்தி உடன் விளையாடிவதையும், பழகுவதையும் பெற்றோர் யாரும் தவறாக நினைத்தது கிடையாது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட கார்த்தி தனது தங்கையை ஆசை வார்த்தை கூறி பலவந்தப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டதால் பெற்றோர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன் மூலம் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து அவரது பெரியப்பா மகன் ஆன கார்த்திக் கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் சித்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.