Connect with us

உடைந்த அரிசி ஏற்றுமதி: செப்.30-ம் தேதி வரை அனுமதி!!

rice

செய்திகள்

உடைந்த அரிசி ஏற்றுமதி: செப்.30-ம் தேதி வரை அனுமதி!!

உலக அளவில் நெல்லை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளை பொருத்த வரையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சீனாவுக்கு அடுத்ததாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், செப்டம்பர் 9 முதல் 15 வரை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் உடைக்கப்பட்ட அரிசி ஏற்றுமதி செய்ய டிஜிஎஃப்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இதன் காரணமாக ஏற்கனவே உடைந்த அரிசியை ஏற்றும் பணி தொடங்கிய நிலையில், சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு செப்டம்பர் 15 வரையில் மட்டுமே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது செப்டம்பர் 15 முதல் 30 வரையில், சில நிபந்தனைகளுடன் உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிப்பதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top