இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கிடையேன வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரிட்டன் பிரதமர் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிபடைத்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வருவதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன் பிரதமர் இந்தியா வருவதற்கான திட்டம் இரண்டுமுறை ரத்து செய்யப்பட்டது. இதனிடையே வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி பிரிட்டன் பிரதமர் இந்தியா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பயணத்தின் மூலம் வருகின்ற 21, 22ம் தேதிகளில் இந்தியா- பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் உறவு மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது.