ராணியின்றி தொடங்கிய பிரிட்டன் நாடாளுமன்றம்; எதற்காக தெரியுமா?

பிரிட்டன்  நாட்டின் ராணியாக இரண்டாம் எலிசபெத் பொறுப்பேற்று அடுத்த மாதத்துடன் 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.  இதனை அந்நாட்டு மக்கள்  கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இளவரசர் பிலிப் கடந்த ஆண்டு மரணம் அடைந்த நிலையில் 96 வயதான ராணி வயது மூப்பு காரணமாக அவதி அடைந்து வருகிறார். கடந்த ஆண்டில் ஏற்பட்ட  கொரோனா தாக்கத்தின் போது அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் 60 ஆண்டுகளில் முதல் முதலாக பிரிட்டன் ராணி இல்லாமல் நாடாளுமன்ற கூட்டம் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. ராணியின் இடத்தில் இளவரசர் சார்லஸ் இருந்து விழாவை சிறப்பித்தையடுத்து அவருக்கு உற்ச்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடக்க உரையை ராணி நிகழ்த்துவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இருப்பினும் வயது மூப்பின் காரணமாக தனது பணிகளை படிப்படியாக குறைந்து வரும் பிரிட்டன் ராணியின் பணிகளை  தற்போது இளவரசர்  தொடர்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment