News
இரண்டே மாதத்தில் பேசிய குழந்தை: கின்னஸ் சாதனையா?

பிரிட்டனில் இரண்டே மாதத்தில் குழந்தை ஒன்று பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பொதுவாக குழந்தை பிறந்து பத்து மாதம் முதல் 14 மாதங்களுக்கு இடையில் தான் பெற்றோர்களின் பேச்சை கேட்டு ஓரிரு வார்த்தைகள் பேசும். ஆனால் பிரிட்டனைச் சேர்ந்த கரோலின்-லிப்ஸ் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை ஒன்று பிறந்து இரண்டே மாதத்தில் பேசியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
இந்த குழந்தையின் தந்தை தனது மடியில் குழந்தையை வைத்து ’ஹலோ’ என்று சொல்கிறார். அந்த வார்த்தையை கேட்ட குழந்தை திக்கி திணறி மீண்டும் ’ஹலோ’ என்று பேசுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
உலகிலேயே இரண்டே மாதத்தில் பேசிய குழந்தை இந்த குழந்தையாகத்தான் இருக்கும் என்றும் இந்த குழந்தையின் பேச்சு சாதனையை கின்னஸில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
2 மாதத்தில் பேச்சைத் தொடங்கிய இந்த குழந்தை பிற்காலத்தில் பெரும் பேச்சாளராக வரும் என்றும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
