உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் உடலை விரைந்து கொண்டு வருக!! பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற முயற்சி!!
கடந்த 15 நாட்களாக ரஷ்யா-உக்ரைன் மீது போர்புரிந்து வந்தது. இதனால் உக்ரைனில் உள்ள அண்டை நாட்டு மக்கள் தங்களது தாயகம் திரும்பினர். அவர்களுக்கான நாட்டு அரசுகளும் பல்வேறு விதங்களில் உதவி செய்தது.
அதுவும் குறிப்பாக நம் மத்திய அரசு உள்நாட்டில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் பெரும் கவனம் செலுத்தியது. இருப்பினும் அங்கு இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்படி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் அங்கு நடைபெற்ற போரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது பேசிய அவர் பாதுகாப்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் பாதுகாப்பு, தயார்நிலை, உலகளாவிய சூழல் குறித்து ஆய்வு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்தார். இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கினார்.
இந்த உயர்நிலை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
