மீண்டும் அதிர்ச்சி! உ.பி.-யில் பாலம் இச்டிந்து விழுந்து விபத்து!!

உத்தர பிரதேச மாநிலம் சரையா கிராமத்தில் பாழடைந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் பொருத்தவரையில் சாத் பூஜையானது 3 நாட்கள் கடைபிடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்திலும் பூஜையானது நடைப்பெற்று வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

அதன் படி, உத்தர பிரதேச மாநிலம் சரையா கிராமத்தில் பாழடைந்த பாலம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி இருந்தனர். அப்போது பாலம் திடீரென எதிர்பாராத விதிமாக இடிந்து விழுந்தது.

அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கால்வாயில் விழுந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவர்களை மீட்டனர்.

குஜராத் பாலம் சரிந்து விபத்து: 120 பேர் பலி!

இந்த விபத்தில் பல பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment