அதிர்ச்சி! பிரிட்ஜ் வெடித்து விபத்து: 3 பேர் பலி!!

செங்கல்பட்டு அருகே பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் கோதாண்டம் நகரை சேர்ந்த குடும்பத்தினர் துபாயிலிருந்து தனது உறவினருக்கு திது கொடுப்பதற்காக வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் உள்ள பிரிட்ஜ் சரிவர இயங்காததாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆன் செய்தபோது பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதே போல் பலத்த காயங்களுடன் 2 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment