ரூ.11 லட்சம் வரதட்சணை கொடுத்த பெண் வீட்டார்.. ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மாப்பிள்ளை!

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் பெண்வீட்டார் மணமகன் குடும்பத்திற்கு 11 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் கொடுத்த நிலையில் அவற்றில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் மணமகன் திருப்பிக் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் என்றாலே வரதட்சணை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்பதும் பல சட்டங்கள் போட்டு தடுத்த போதிலும் வரதட்சணை இன்னும் கொடுக்கப்பட்டும், வாங்கப்பட்டும் வருகிறது என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மணமகனுக்கு ரூபாய் 11 லட்சம் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் கொடுக்கப்பட்ட நிலையில் அவற்றைப் பெற்றுக்கொண்ட மணமகன் அதிலிருந்து ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் அனைத்தையும் பெண் வீட்டாரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். மணமகளின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.