ஓட்டு போடுவதற்காக திருமண நேரத்தை மாற்றிய மணமகன்.. குஜராத் தேர்தல் அதிசயங்கள்

குஜராத் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது நல்ல வாக்கு சதவீதம் பதிவாகி இருப்பதாகவும் குஜராத் தேர்தல் வரலாற்றில் இந்த முறை அதிக வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் ஒரு சில அதிசயங்களும் நடந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் இந்த தேர்தலில் வரிசையாக நின்று வாக்களித்த சம்பவத்தின் புகைப்படங்கள் வைரலானது.

பெண்களின் திருமண வயதுஇந்த நிலையில் தற்போது தேர்தலில் ஓட்டு போடுவதற்காகவே மணமகன் தனது திருமண நேரத்தை மாற்றி உள்ள தகவல் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கான பாரம்பரிய உடையுடன் ஓட்டு போட வந்த மணமகனை செய்தியாளர்களை சந்தித்தபோது ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது என்றும் எந்த ஓட்டும் வீணாக கூடாது என்றும் இன்று காலை எனக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் நான் அந்த திருமணத்தை மாலை நேரத்தில் மாற்றி அமைத்து உள்ளேன் என்றும் அவர் கூறினார்.

தான் ஓட்டு போட்டால் மட்டும் போதாது தனது திருமணத்திற்கு கலந்துகொள்ள வருபவர்களும் ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காகவே திருமண நேரத்தை மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்று மாலை அவர்கள் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.