முதலிரவின்போது மாறிய மணமகள்கள்.. இரட்டையர் மணமக்களுக்கு நேர்ந்த சோகம்..!

இரட்டை மணமகன்களுக்கு இரட்டை மணமகள்கள் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் முதலிரவின் போது மணமகள்கள் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் இரட்டை இளைஞர்களுக்கு, இரட்டை குழந்தையாக பெண்களை பெற்றோர்கள் முடிவு செய்து திருமணம் செய்து வைத்தனர்

இந்த திருமணம் உற்றார் உறவினர்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடந்தது. இரட்டை மணமகன்களும் சரி இரட்டை மணமகள்களும் சரி அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்ததால் பெற்றோர்களை தவிர வேறு யாருக்கும் அவர்களை அடையாளம் கண்டு கொள்வது என்பது மிகுந்த சிரமமாக இருக்கும்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த பின்னர் முதல் இரவுக்கு உறவினர்கள் ஏற்பாடு செய்த போது மணமகள்கள் மாறிவிட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் தான் தங்களுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை ஒருவர் ஆனால் முதலிரவு நடந்தது இன்னொருவருடன் என்பதை இரண்டு மணமகளுமே கண்டுபிடித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து அவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் இதுகுறித்து இருதரப்பு பெற்றோர்களூம் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து அடுத்து என்ன செய்யலாம்? திருமணம் செய்த தம்பதிகளையே ஒன்றாக வாழ வைக்கலாமா? அல்லது முதலிரவு நடந்த தம்பதிகளை ஒன்றாக வாழ வைக்கலாமா என்று அந்த குடும்பத்தின் பெரியவர்கள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews