Tamil Nadu
மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்: சி.டி.ஸ்கேன் எடுக்க முடிவா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் என்றும் அந்த தண்டனையை அவர் கடந்த 4 ஆண்டுகளாக அனுபவித்து வந்த நிலையில் வரும் 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சசிகலாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறியதும் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் தற்போது நேற்று நள்ளிரவு மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் இருப்பதால் அவருக்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யவேண்டுமென்றும் சசிகலாவின் தம்பி மகன் ஜெய ஆனந்த் மற்றும் திவாகரன் வலியுறுத்தியுள்ளனர்
சசிகலாவை நேரில் பார்க்கவும் அவருக்கு அளிக்கப்படும் குறித்து சிகிச்சைகள் விளக்கம் கேட்கவும் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஜெய ஆனந்த் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தினரின் இந்த வேண்டுகோளை பெங்களூரு சிறையில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
