#Breaking அதிமுகவின் அடுத்த தலைமை யார்? மரணத்திற்கு முன்பு ஜெயலலிதா எடுத்த இறுதி முடிவு – உண்மையை உடைத்த சசிகலா!

தனக்கு பிறகு யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் ஜெயலலிதா இறுதி செய்து வைத்திருந்ததாகவும், அதற்கு முன்பாக அவர் இறந்துவிட்டதாகவும் விகே சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் வி .கே . சசிகலா பங்கேற்று ஆதரவற்றோருக்கு புடவை , வேட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களையும் , மதிய உணவாக மட்டன் பிரியாணியையும் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா; தனக்கு பிறகு தலைமைப் பொறுப்பில் யாரை நியமித்தால் சரியாக இருக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியும் , அதற்கான பணியில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில்தான் எதிர்பாராத வகையில் திடீரென இறந்து விட்டார்… பெங்களூருக்கு சிறை செல்லும் முன்பு அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லோர் மனதும் ஒரே மாதிரியாக இருக்காது , நான் எந்த உயரம் சென்றாலும் என் பாதத்தை பார்த்தே நடப்பேன். ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் வந்தோ , வழக்கறிஞர்கள் மூலமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ விளக்கம் தருமாறு கூறினர்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து கேள்விக்கும் எழுத்து வடிவிலும் சரியான பதிலை கொடுத்தேன் , காரணம் ஜெயலிலிதா மரணம் குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும் என்று நான் நினைத்தேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

நானும் ஜெ.வும் பெண்ணாக இருந்தாலும் பெண் சிங்கமாக இருந்தோம் …கருணாநிதி தந்த தொந்தரவுகளை தாண்டி சாதித்தோம். முதுகிற்கு பின்னால் பேசுபவர்கள் நாங்கள் இருவரும் கிடையாது.

எய்ம்ஸ் மருத்துவர்கள் , அப்போலோ தனியார் மருத்துவர்கள் , தமிழ்நாடு அரசின் மருத்துவர்கள் என்று மூன்று தரப்பினர் நாள்தோறும் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அறிக்கை தந்தனர். அதில் மறைப்பதற்கு ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.