#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் – போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.

முதலில்  26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்ட து. ஆனால் இதில் 4 பேர் தலைமறைவாக இருந்ததால், மீதமிருந்த 22 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதால் 21 பேர் மீதான வழக்கை நீதிபதி ராஜலட்சுமி வழக்கை விசாரித்து வந்தார். கடந்த வாரம் 21 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் சித்தி, சித்தப்பா உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் 6 பேர் பெண்கள் ஆவர். மீதமுள்ள 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதில் காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் உட்பட  13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment