Connect with us

#BREAKING | உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உதவி எண் அறிவிப்பு!

War

செய்திகள்

#BREAKING | உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உதவி எண் அறிவிப்பு!

#BREAKING | உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உதவி எண் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

சோவியத் யூனியன் பிளவுப் பட்டதற்கு பிறகு தனிநாடாக உருவான உக்ரைனை ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக் கொள்ள ரஷியா முயன்று வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் உக்ரைன் மீது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் போரை அறிவித்துள்ளார்.

பிறநாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும், மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்வில் ரஷிய படையினர் துப்பாக்கி தாக்குதல் நடத்திய நிலையில், டேசா துறைமுகத்தில் ரஷ்ய படைகள் சக்தி வாய்ந்த ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் ரஷ்யா எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதனை பிற உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென உக்ரைன் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரைத் தொடர்ந்து அங்குள்ள தமது நாட்டு மக்களை மீட்க அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன.

தற்போது உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்; http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top