#Breaking நாளை 6 மாவட்டங்களை அடித்து நொறுக்கப்போகும் கனமழை – எங்கு தெரியுமா?

புயல் நிலைகொண்டுள்ளதால் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் சென்னையில் இருந்து தென் கிழக்கில் சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 460 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலானது நாளை தொடந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், நாளை இரவு புதுச்சேரி – ஸ்ரீஹரிக்கோட்டா இடையே கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 8,9,10 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 8ம் தேதி டெல்டா மற்றும் கடலூரில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.