#Breaking மாலையில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.720 உயர்வு!

இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து 44 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நேற்று தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை சென்னையில்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து 5,475 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து 43,800 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில், மாலையிலும் விலை மளமளவென அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 90 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 44 ஆயிரத்து 040 ஆக விற்பனை ஆகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.