இந்தியாவில் அரசாங்க வேலை என்றாலே ஒரு தனி மதிப்பு தான். இதற்காக தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் எப்படியாவது கவர்மெண்ட் வேலைக்கு போய் விட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே காணப்படுகிறது. அதற்காக அவர்கள் படிக்கும் போதே பல போட்டி தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்காக வருடம் தோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தபடுகிறது.
இந்த நிலையில் இனி தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அனைத்து வகையான மாநில அரசுப் பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி ஆவின், மின்வாரியம் போக்குவரத்து துறை உள்ளிட்ட அமைப்புக்கும் டிஎன்பிஎஸ்சி மூலம் இனி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என இன்று கூடிய சட்டப்பேரவையில் தகவல் வெளியாகியுள்ளது. புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.