#Breaking பெற்றோர்களே உஷார்; 8 குழந்தைகளை காவு வாங்கிய அம்மை நோய்!

மும்பையில் குழந்தைகளுக்கு மத்தியில் தட்டம்மை பாதிப்பு தீயாய் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் 169 ஆக இருந்த தட்டம்மை பாதிப்பு ஒரே நாளில் 176 ஆக அதிகரித்துள்ளது. மும்பை கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள தகவலின் படி, மாநிலம் முழுவதும் 2,860 பேர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் உள்ள எட்டு வார்டுகளில் 17 இடங்களில் அம்மை நோய் பரவியுள்ளது. இதில் 8 குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

மும்பை கார்ப்பரேஷன் இதுவரை 23,87,386 வீடுகளை ஆய்வு செய்துள்ளது மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் 237 பேர் உட்பட 2,860 சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிவப்பு, மங்கலான தோல் வெடிப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், வீக்கமடைந்த கண்கள், தொண்டை புண் மற்றும் இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையை அணுகும்படியும், குழந்தைகளை தட்டம்மை பாதிப்பில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.